கனடாவில் கடும் வெப்பம் – அனல் காற்று! 7 நாட்களுக்குள் 719 பேர் பலி!!

உலகில் குளிரான நாடாகக் கருதப்படும் கனடாவில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் 7 நாட்களில் சுமார் 719 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக கடும் வெப்பம் நிலவி வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் தடுப்பூசி ஏற்றும் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கனடா நாட்டில் இதுவரை இல்லாத வகையில் வெப்ப நிலை அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கனடாவில் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் கடந்த வாரம் 45 டிகிரி செல்சியஸாக பதிவான வெப்ப நிலை தற்போது 49 டிகிரி செல்ஸியாகி உள்ளது. வான்கூவர் நகரப் பகுதியிலும் கடும் வெப்பம் நிலவுகிறது.

இந்த அனல் காற்றுக்கு இதுவரை கனடாவில் பலர் பலியாகி உள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிகளை நோக்கி படையெடுத்து சென்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மயமாக்கல் விளைவாக பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகப்படியான வெயில், மழை வெள்ளம், சூறாவளி போன்றவற்றை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

முன்னதாக, , அன்டார்டிக்காவின் வடக்கே இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் உடைந்து நொறுங்கியது. இது பிரான்ஸின் பாரீஸ் நகரை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அன்டார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸாக உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles