கனேமுல்ல சஞ்சீவ கொலை: மேலும் மூவர் கைது!

புதுக்கடை நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதனடிப்படையில், இதுவரை இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதற்கு முதல்நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியினை வழங்கியதற்காகவும் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்றைய சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தப்பிச்செல்வதற்கு உதவியதற்காக, தமித் அஞ்சன நயனஜித் என்ற 25 வயதுடைய நபரும், உடுகம்பொல, அஸ்கிரியபொல பகுதியைச் சேர்ந்த 19 வயது சாமோத் கிம்ஹான் என்ற இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles