வாகனத்தில் “கப்புட்டு காக் காக்” என்ற ஒலியை எழுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.எஸ்.பிரபாகரன், இன்று (14) உத்தரவு பிறப்பித்தார்.
போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றத்தை யாராவது செய்திருந்தால், சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கலாம் என்றும் சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என கோட்டை பொலிஸாரை எச்சரித்த நீதவான், சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவை விடுதலை செய்துள்ளார்.
மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது, தேவையில்லாமல் ஒலி எழுப்பியதாக குற்றம் சுமத்தி சட்டத்தரணிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










