“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக பெருந்தோட்ட நிறுவனங்களை கண்டிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு முதுகெலும்பில்லை. மாறாக தங்களின் இயலாமையை மூடிமறைக்க மாற்றுத் தொழிற்சங்கங்களை அக்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.”
இவ்வாறு இதொகாவின் உப தலைவர் திருகேஸ் செல்லசாமி தெரிவித்துள்ளார்.
“ தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக இதுவரை குரல் எழுப்பாத முற்போக்கு கூட்டணியினர், மக்கள் நலன் பற்றி கதைப்பது அரசியல் நாடகமாகும்.
குறிப்பாக கூட்டணியின் தலைவர் தனக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு எவ்விதமான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை இதுவரை முன்னெடுக்கவில்லை. இது அவருடைய இயலாமையை காட்டுகிறது.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
