கம்பளையில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்

கம்பளை – மரியாவத்த பிரதான வீதியில் நேற்று காலை கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்த கொஸ்கொல் என்ற இடத்தில் கணவர் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 44 வயதுடைய சமந்தி இனோக்கா ரணசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்று காலை இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது கணவர் பின் தொடர்ந்து சென்று மனைவியின் தலை முடியை பிடித்து கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேகநபரான கணவர் தப்பிச் சென்றுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஆறுமாத காலமாக இவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மற்றும் (soco) விசேட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles