காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் அக்கரப்பத்தனை தவிசாளர் பதவியில் கதிர்ச்செல்வன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று இ.தொ.கா. அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், சிகிச்சைகளின் பின்னர் முழுமையாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் இன்று அவர், இ.தொ.கா. அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தனது செயலுக்காக மன்னிப்பு கோரிய அவர், இனிமேல் அவ்வாறான தவறுகள் இடம்பெறாது என இ.தொ.கா. உயர்பீடத்திடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சொந்த பணத்தில் நிவாரண திட்டங்களை முன்னெடுக்குமாறு உயர்பீடத்தில், கதிர்ச்செல்வனுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதேச சபைகளின் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கதிர்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்
