மஹர சிறைச்சாலைக்குள் குழப்பம்: 4 கைதிகள் காயம் – பாதுகாப்பு தீவிரம்

மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவிகனர்கள் குவிந்துள்ளனர்.

தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்பனவும் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளன.

காயமடைந்த நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

( பாதுகாப்பு தரப்பில் இருந்து இச்சம்பவம் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்க்பபடவில்லை.)

……………..

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பல சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கான காரணம் அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles