கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா நகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், உடதெல்தோட்ட விகாரையிலும் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அங்கிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
அதே இரவில், கலஹா உடதெல்தோட்டை விகாரைக்குள் நுழைந்த திருடர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த கரண்டுவ (தூபி வடிவப் பேழை) தாங்கிக்குள் இருந்த பெறுமதிமிக்க ரத்தின கற்களைத் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட மாணிக்கக் கற்களின் பெறுமதி சுமார் 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, தடயவியல் பொலிஸ் பிரிவினர் (SOCO) மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கலஹா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க.யோகா
