கலஹாவில் குடும்பஸ்தர் படுகொலை – மூவர் கைது!

கலஹா உடதெல்தோட்ட பெல்வூட் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கலஹா பொலிஸார் மீட்டுள்ளதுடன் 24 மணித்தியாலங்களுக்குள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் தந்தை மகன் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்

பொன்னையா ஜெயகுமார் என்ற 45 வயது மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்றுள்ளதாகவும் மூன்று மகள்களில் ஒருவர் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்து வருவதோடு ஏனைய இரு மகள்களில் ஒருவர் திருமணமான சகோதரியின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருவதுடன் மற்றைய மகள் உறவினர் வீடொன்றில் தங்கி பாடசாலை சென்று வரும் நிலையில் குறித்த நபர் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது

24 ஆம் திகதி பகல் பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு நபர் ஒருவர் தொலைபேசியினூடாக வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கலஹா பொலிஸார் அங்கு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது தங்களுக்கு தகவல் வழங்கிய நபரையும் உடம்பில் இரத்த கறைகள் காணப்பட்ட அயல் வீட்டு நபரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளையடுத்து ராகம பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபரும் ராகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கூறியதாவது,..

குறித்த நபரை 23 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கொலை செய்து விட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நபரின் உடைகளை மாற்றி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏனைய தடயங்களையும் அகற்றியமை தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில’ மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles