கலஹாவில் 16 வயது மாணவருக்கு கொரோனா தொற்று!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரவத்தை பகுதியில் 16 வயதுடைய மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த மாணவரும் அவரின் பெற்றோரும் மீன் வாங்குவதற்காக பேலியகொடை மீன் சந்தைக்குச்சென்று 16 ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளனர்.

இவர்களிடம் கடந்த 24 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பீசீஆர் பரிசோதனை முடிவு நேற்று (26) மதியம் வெளியானது. இதில் 16 வயது மகனுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தை, தாய் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகாதபோதிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இரண்டாம்கட்ட பீசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அத்துடன் இவர்களுடன் பழகிய ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான 16 வயது இளைஞன் தெல்தெனிய வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

புபுரஸ்ஸ நிருபர்

Paid Ad