மலையகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கவிதாயினிகளில் ஒருவரான எஸ்தர் நதனியலின் பெருவெடிப்பு மலைகள் எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்விற்கு நாக ஸ்ரீ கங்காதரன் தலைமை தாங்கவுள்ளதுடன் பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு, கவிஞர் சு. முரளிதரன், தில்லைநாதன் பவித்ரன், செ. ஞானராசா,சிவனு மனோகரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
வரவேற்புரையை ஊடகவியலாளர் மகேஸ்வரி விஜயநாதன் நிகழ்த்தவுள்ளார்.
நூலின் முதற் பிரதியை பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர்சிங் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், சிறப்புப் பிரதியை மு. சுரேந்திரன் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
