ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது யானை, காகத்தை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்னமும் எமது பக்கமே உள்ளனர். ஐதேகவானது இன்று அடகுவைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வேட்புமனு கோரி மொட்டு கட்சிக்கு செல்ல வேண்டிய நிலை. எனவே , இறுதிவரை காத்திருக்காமல் எம்முடன் இணையுங்கள்.” – எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.










