பண்டாரவளை பூனாகலை இல – 3 தமிழ் வித்தியாலயத்தில் இரு வகுப்பறைகளை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இன்று (03) அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தரம் ஒன்று மற்றும் தரம் 2 மாணவர்கள் கற்கும் வகுப்பறைகளே சேதமடைந்துள்ளன. அத்துடன், தளபாடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்து கொடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமு தனராஜ்