காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவரின் சடலம், மகாவலி கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயின்ற, பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து பதில் கிடைக்காததால், மாணவன் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து, மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது அவர் எழுதிய கடிதமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அவர் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
