ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் அறவிட அனுமதிக்கமாட்டோம்!

ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. எனவே, அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

“ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை மிக விரைவில் திறக்கும். அது எளிதாக இருக்காது என்றாலும், நாங்கள் அதை மிக விரைவில் திறப்போம்.

ஹார்முஸ் நீரிணைக்கு கட்டணம் விதிக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. அவர்கள் கட்டணம் விதிக்க நினைத்தால், நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்” என்று கூறினார்.

Related Articles

Latest Articles