காணாமல்போயிருந்தவரின் உடல் பாகங்கள் பதுளை – கந்தகெதர காட்டு பகுதியில் மீட்பு!

கந்தகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை – கந்தகெதர கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் நேற்று (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர், சொரணதொட்டை, கொஹோவில, கெடிகஹத்தன்ன பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் 28ஆம் திகதி மதியம் குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மரத்தில் சடலம் ஒன்றின் பாகங்கள் தூக்கில் தொங்குவதை கண்டு கந்தேகெதர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி வேலைக்குச் செல்வதாகவும், வீட்டை விட்டு சென்ற நபர் அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த நபரின் கையடக்கத் தொலைபேசி , குடை மற்றும் அவர் கொண்டு சென்ற ஆடைகள், பை ஆகியவை இவ்விடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடல் பாகங்கள் காணப்படும் இடத்தில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கந்தகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles