காணி உரிமையே மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு!

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். அந்த இலக்கை விரைவில் அடைந்துவிட முடியாது. அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பது சாத்தியமற்றது. ஆனால் எமது மக்களுக்க காணி உரிமையை வழங்க முடியும். அதனைப் பெற்றுக்கொடுத்தால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். எமது மக்களே வீடுகளை அமைத்துக் கொள்ளும் திறன் இருக்கிறது. வீடுகளை அமைப்பதற்கு சிலரிடம் வசதி இருந்தும், காணி உரிமை இல்லாததால் அது தடைபட்டுள்ளது. எனவே, காணி உரிமைதான் பிரதான பிரச்சினையாகும்.

மலையக மக்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக இருந்தது. இன்று நான்காவது பெரும்பான்மை சமூகமாக பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டை உருவாக்க மலையக சமூகம் அரும்பாடுபட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிலும் அவர்களின் உழைப்பின் பங்களிப்பு உள்ளது. எனவே, எமது மக்களை மாற்று கண்ணோட்டத்தோடு – அனுதாபத்தோடு பார்ப்பது ஏற்புடையது அல்ல. எமது மக்களுக்கு சம அந்தஸ்து தேவை. மலையக மக்களை தனியாக பார்க்காது தேசிய சமூகமாக பார்க்கப்பட வேண்டும்.

மலையக தமிழர்களின் இலங்கைக்குவந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ விழா அரச அங்கீகாரத்துடன் எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles