காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles