காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

 

பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

தமது துள்ளலான இசையால் இளம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத், திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இவரது இசையில் அண்மையில் வெளியான ‘ஜெயிலர்-2’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத் – காவ்யா மாறன் இடையே காதல் மலர்ந்துள்ளதாகத் திரையுலகில் பல்வேறு தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்தபோதிலும், இருதரப்பும் இதுகுறித்து மௌனம் காத்தே வந்தன.

இந்நிலையில், இவர்களது காதல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வெளிநாடான கிரீசில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

முன்னதாக இவர்களது திருமணம் செஷல்ஸ் நாட்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அழகிய கடற்கரைகளும் எழில்மிக்கக் கட்டிடங்களும் நிறைந்த சுற்றுலாத் தலமான கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்தத் திருமணத்திற்காக 4 சிறப்புத் தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, திருமணத்தை முன்னிட்டு நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கோர்ப்புப் பணிகளை அனிருத் ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்தைத் தொடர்ந்து, இவர்களது பிரமாண்ட திருமண வரவேற்பு விழா (Reception) நவம்பர் மாதம் 21 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதற்காக, தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தனது மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

Related Articles

Latest Articles