குடும்ப ஆட்சி வேண்டாம்! காங்கிரஸில் இருந்து வெளியேறினார் கருப்பையா ஜெயராம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உபத்தலைவர் கருப்பையா ஜெயராம், மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனை நேற்று நேரில், சந்தித்து இவ்வாறு இணைந்து கொண்டார்.

நுவரெலியா , கந்தப்பளை இ.தொ.கா மாவட்ட தலைவராகவும், முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராகவும், இ.தொ.காவின் முன்னாள் உபத்தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

” காங்கிரசுக்குள் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. தலைவர் பதவியும் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்கே சென்றுவிட்டது. சாதாரண மக்களுக்கு அங்கு இடமில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்.” என கருப்பையா ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles