குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா, மரே, பிரதான வீதி

மஸ்கெலியா, நல்லதண்ணி – மஸ்கெலியா, மரே, பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் , அவ்வழியை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி புனரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு 2020 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அது இடைநடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிக்காக கொண்டுவரப்பட்ட வாகன இயந்திரங்களுடன் வீதியோரம் நிறுத்தப்பட்டு, தற்போது துருபிடித்துவருகின்றது.

(மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles