குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

திருகோணமலை, வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பனை மரத்தில் ஏறி பனை ஓலை வெட்டியபோது அதில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியதாகவும், சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் மாலை 3.00 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டபோது இரவு 9.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.

மரணம் தொடர்பில்லான விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

( அப்துல்சலாம் யாசீம்)

Related Articles

Latest Articles