மஸ்கெலியா, புரவுன்ஷீக் தோட்டத்தில் ராணி பிரிவில் ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை 5.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான அறுவரில் மூவர் சிறுவர்களாவர்.