குளவிக்கொட்டு: 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

சாமிமலை கவரவில்லை தோட்டத்தில் 200 ஏக்கர் பிரிவில் கொழுந்து கொய்துகொண்டிருந்த நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று மாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா நிருபர்

 

Related Articles

Latest Articles