பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவுமே லங்கா சமசமாஜக் கட்சி ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தும் என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளிவந்த பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.