ரணில், சஜித் கூட்டணி உறுதி: மாகாணசபைத் தேர்தலில் சங்கமம்

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது. ஏனெனில், கடந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு 42 சதவீத வாக்குகளே கிடைத்தன. அந்த வாக்கு வங்கி தற்போது 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

எனவே, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், எமது கட்சியும் இணைந்தே போட்டியிடும்” என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles