குவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்

இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கொரோனவினால் தொழில் வாய்ப்பை இழந்து ( இலங்கைக்கு) சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் காத்துக் கிடப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும், குவைத்திற்கான இலங்கை தூதரகம் இவர்களை கண்டுகொள்ளாது, கைவிட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளான வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண்களின் இந்த நிலை கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் படங்கள் பேர்னாட் கிரிஸ்ரி

Paid Ad
Previous articleகொரோனாவால் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
Next articleகலஹாவில் கொத்து கொத்தாக இளநீர் காய்க்கும் அதிசய தென்னை!