இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை , அட்டமலை ,மேம்பாடி, சூரல்மலை போன்ன பகுதிகளில் ஏற்பட்ட பெய்த கனமழை
காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 275 க்கும் மேற்பட்டோர் காணீமல் போயிருந்தனர்.
மலையோர கிராமங்கள் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,600 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2018ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாகும். கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் கனமழை பெய்து மண்ணை மென்மையாக்கியதால் இந்த பேழிவு நிகழந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள, தேசிய பேரிடர் தீட்புப் படையினர் மற்றும் சூலூரிலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களும் மற்றும் இராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.