நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – 05 பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் முறைமை எனப்படும் சட்டவிரோத கொடுக்கல் – வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.










