டெங்கு நோய்: உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 92 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 18 நாட்களில் 7,516 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 49,163 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மாகாணத்தில் 8, 372 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,612 பேரும், ஊவா மாகாணத்தில் 2, 596 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுன் இறுதி மற்றும் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles