கையடக்க தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் ரணில்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்க தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொது சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசி சின்னம் முன்னிலையில் இருப்பதாக அறியமுடிகின்றது.

அமைச்சர் டிலான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியின் சின்னமே தொலைபேசி சின்னமாகும். அக்கட்சியின் ஆங்கில பெயரின் சுருக்கம் (யூ.பி.பி.) என வருகின்றது. ஆக ஐக்கிய தேசியக் கட்சியின் (யூஎன்பி) என்ற விடயத்துடன் ஓரளவு ஒத்துபோகின்றது.

அத்துடன், நிலையான தொலைபேசி என்பது அந்த காலம், ஸ்மார்ட் போன் என்பதே இந்தகாலம் எனக் கூறி, சஜித் அணிக்கு எதிராக பிரசாரம் செய்யவும் இதனை பயன்படுத்த முடியும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சின்னம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles