கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி: மஸ்கெலியாவில் சோகம்

மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலசலக்கூட குழிக்குள் இறக்குவதற்கு கொண்டுவரப்பட்டிருந்த கொங்கிரீட் வளைங்களில் ஒன்று மாணவன் சரிந்து விழுந்தில் மேற்படி மாணவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

(இவை பாடசாலைக்கு கொண்டுவரப்பட்ட கொங்கிரீட் வளையங்களா அல்லது தோட்டத்தால் கொண்டுவரப்பட்டு பாடசாலை வளாகத்தில் இறக்கிவைக்கப்பட்டிருந்தவையா என்பது தொடர்பான தகவல் இன்னும் சரியாக வெளியாகவில்லை.)

Related Articles

Latest Articles