கொட்டக்கலையில் ஆட்டோ விபத்து: நால்வர் படுகாயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (16) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கொட்டக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நானுஓயா

Related Articles

Latest Articles