” கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இத்தாலியில் உள்ள பீஸா மற்றும் அமெரிக்காவின் ஹம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளை போன்றே கொத்து ரொட்டியை மாற்றுவதற்கு இலங்கை செயல்பட வேண்டும் .
கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஐஸ்கிரீம் கொத்துகூட தயாரிக்கப்படுகின்றது. எனவே, இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.










