இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 235 பேர் 60வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட ஆறு பேரும் , 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஒன்பது பேரும், 41-50 வயதுக்கிடைப்பட்ட30 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 49 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 84 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 151 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










