கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி (இந்திய ரூபா), இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் (இந்திய ரூபா) வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார் (இந்திய ரூபா) . சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் ரஜினிகாந்த்.

Paid Ad
Previous articleஇராகலை மாகுடுகல தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
Next articleகொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை 1000 ஐ நெருங்குகிறது!