ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களை முடக்கி, அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் Scott Bessent
தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை தமது நாடுமீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

போர் நிறுத்தத்துக்காக முன்வைக்கப்படும் நிபந்தனைகளில் இது பிரதான விடயமாகும்.

இந்நிலையில் தடைகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles