‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது! சமூகத்தொற்று அபாயம்?

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றியவர்களில் இன்றுவரை 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 453 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னரே இன்று 14 ஆவது மரணம் பதிவானது. குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சமூகதொற்று என்ற அபாய கட்டத்தில் இருப்பதாக பொதுசுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles