கொரோனா தொற்று நோயின் மத்தியிலும் PET போத்தல்களை சேகரிப்பவரின் வாழ்க்கைப் பயணம்

கொரோனா தொற்றின் மத்தியிலும் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் மகேஷ்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சுற்றாடலுக்கு எதிர்மறையான தீங்;குகளை விளைவிப்பதனால் உலகளவில் இன்று மறுசுழற்சியின் முக்கியத்துவம் தொடர்பாக பேசப்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சியானது நாம் வாழும் இந்த பூமியை சுத்தமாக வைத்திருப்பற்கு முக்கிய பங்காற்றும் அதேநேரம் எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான உலகை வழங்கவும் பங்களிப்பு செய்;கின்றது. மீள்சுழற்சி செய்வதனால் பல்வேறு வகையான பொருளாதார சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றமையும் இன்னொரு முக்கிய நன்மையாகும்.

இலங்கையில்; 1980களில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் வாழ்வாதாரமானது தனிநபர, சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில் மற்றும் பிரிவுகளில் ஆரம்பமாக தொடங்கின. இதனால் நாட்டில் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பாளர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் கணிசமான அளவு உயர ஆரம்பித்தது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கைகளுக்கு அமைய 2007 ஆம் ஆண்டு 37 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2019இல் 230 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு பிளாஸ்டிக் கழிவு போத்தல்களை சேகரிப்பவர் தான் இந்த கதையின் நாயகன் மகேஷ். இவர் காலியிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் வைத்;தியசாலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றார். தரம் 2 மற்றும் 8 இல் கல்வி பயிலும் இரண்டு பிள்;ளைகள் அடங்கலாக தனது குடும்பத்தின் அனைத்து பொருளாதார தேவைக்கும் இதுவே வழியாக அமைந்துள்ளது.

வழமைப்போன்று வேலைப்பளு நிறைந்த நாளில் மகேஷ் தனது லொறியை எடுத்துக்கொண்டு காலியில் அமைந்துள்ள பல இடங்களிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கச் சென்றார். அவரது பயணமானது உனவட்டுனவிலுள்ள 40 ஹோட்டல்களில் பிளாஸ்டிக் சேகரிப்பு பணியுடன் ஆரம்பமானது. கம்புருகமுவ மற்றும் பூசாவிலுள்ள இராணுவ முகாம்களிலும் அவர் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளார். அத்துடன் காலி துறைமுகம், கடல் மற்றும் கடற்கரை போன்ற இடங்களிலுள்ள பிளாஸ்டிக் போத்தல் குப்பைகளை அவர் சேகரித்தார்.

எமது நாட்டில் மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பவர்கள் அதிகரித்துள்ளபோதிலும், கொவிட்-19 காரணமாக மகேஷ் மற்றும் அவரது வியாபாரத்திற்;கு பல்வேறு புதிய சவால்கள் எழுந்துள்ளன. தற்போது ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் 2 டாட்டா லொறிகள் நிறைய பிளாஸ்டிக் போத்தல்கள் அவரால் சேகரிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட 1>000 கிலோகிராம் ஆகும். கொவிட் தொற்றுக்கு முன்னர் அவரால்; மாதாந்தம் 4 முறைக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அண்ணவளவாக 2>500 முதல் 4>000 கிலோகிராம் வரையான பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து அவற்றை இகோ ஸ்பிண்டில்ஸ் இற்கு அனுப்பினார்.

இருப்பினும், மகேஷுற்கு கழிவு சேகரிப்பு பிரச்சினையானது இந்த தொற்றுநோயை விட மாறுபட்டதொன்றாகும். இத்துறையில் ஒரு தசாப்பத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்ட அவர், சேகரிப்பு பணிகளை வீடுகள் மற்றும் வணிக மட்டத்தில் மேற்கொள்ளும்போது பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, நுகர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆகியவையும் மோசமான கழிவு முகாமைத்துவம் மற்றும் அவற்றை தனித்தனியாக பிரித்தல் பிரச்சினைகள் போன்ற எமது நாட்டில் பிரதானமாக காணப்படுகின்றன.

மக்கள் அனைத்து வகையான கழிவுகளையும் ஒன்றாகவே அப்புறப்படுத்துகிறார்கள். நான் சேகரிக்கும் ஹோட்டல்களிலும் இக்கழிவுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படுகின்றன. அதைப் பிரித்து வைப்பதற்கு அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரித்து வைத்தால் என்னைப் போன்ற சேகரிப்பாளர்களுக்கு அது இலகுவாக அமையும்’ என மகேஷ் குறிப்பிட்டார்.

கொவிட் 19 காரணமாக ஹோட்டல்களில் தங்கியுள்ள விருந்தினர்களால் அகற்றப்படும் கழிவுகளை பிரிக்க ஊழியர்கள் அச்சப்படுவதே ஹோட்டல்களில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்காமைக்கு காரணம் என அவர் குறிப்பிட்ட மகேஷ், இதனால் தமது பணி மேலும் சிரமமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுசுழற்சி செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பாகவும் மகேஷ் நன்கறிவார். சுற்றாடலில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வேறு வகையில் பயன்பாட்டுக்கு உட்படுகின்றது. பிளாஸ்டிக் போத்தல்கள் பைபர் மற்றும் ஆடை போன்ற தயாரிப்புகளுக்ககு பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக் கொண்டே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் உலகக்கிண்ணத்திற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ ஆடை வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் வெளிப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு கடுமையான பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டு, கடந்த சில ஆண்டுகளாக மகேஷின் வியாபாரத்தை வளர்ப்பதற்கு இகோ ஸ்பிண்டில்ஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. அவருக்கு மேலும் உதவ, சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு உயிர் வழங்கும் இயந்திரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளனர். ஆன்-சைட் இயந்திரத்தை நிறுவுவது மகேஷிற்கு கழிவுகளை அமுக்கச் செய்ய உதவுகிறது, இது மறுசுழற்சி செய்பவர்களுக்கு கழிவுகளை வெளியே கொண்டு செல்லும் போது வண்டிகள் இடத்தை மீதப்படுத்துகின்றது.

சேகரிக்கும் கழிவுகளை வைப்பதற்கு மகேஷிற்கு குடில் ஒன்;றை அமைத்துக் கொடு;ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை உதவிசெய்தது. ‘கொவிட் எமது வியாபார வளர்ச்சியை முற்றாக சீர்குலைத்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை மறுசுழற்சி இயந்திரமொன்றை பெறுவதற்கு எனக்கு உதவினால் என்னால் அதிக அளவு பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்ய முடியும்’ என மகேஷ் குறிப்பிட்டார்.

கொவிட்-19 காரணமாக துரிதமாக மாறி வரும் சூழ்நிலைக்கேற்ற தனது வியாபார கட்டமைப்பை மாற்றவதற்கு மகேஷ் விருப்பம் கொண்டுள்ளார். ஏனைய பிளாஸ்டிக் பொருட்களையும் மீள்சுழற்சி செய்யக்கூடிய மோல்டிங் இயந்திரமொன்றை நிறுவவதற்கு மகேஷ் விரும்புகின்றார். இதன்மூலம் அவரால் யோகட் கோப்பைகள் போன்று சுற்றாடலுக்கு வீசப்படும் ஏனைய பிளாஸ்டிக் பொருட்களையும் மீள்சுழற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘என்னிடம் இத்தகைய ஒரு இயந்திரம் இருந்தால், மலர்ச்சாடி மற்றும் பேஷின்கள் போன்ற கழிவுகளிலிருந்தும் சிறந்த உற்பத்திகளை செய்து நலன்பெற முடியும்’ என கூறினார்.

கொவிட்-19 வேலைவாய்ப்புக்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அவர் குறிப்பிடுகின்றார். சேவைத் துறை, தங்குமிடம், போக்குவரத்து, உணவு மற்றும் தனிப்பட்ட சேவைகள் போன்றன தமது ஊழியர்களை பணி நிறுத்தம் செய்துள்ளன. உள்ளுர் முடக்க நிலை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. ஆகையால் தமது தொழிலை விரிவுபடுத்தினால் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அதனால் தொழில் இழந்தவர்களளுக்கு உதவி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகேஷின் கதை இலங்கையில் மறுசுழற்சி பொருட்களை சேகரிக்கும் 200இற்கு மேற்பட்டவர்களில் ஒன்றாகும். எம்மால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீள்சுழற்சி மையத்துடன் நிறைவுக்கு கொண்டு வருவது மட்டும் மகேஷின் தொழிலல்ல. அவர் அந்த கழிவுகளுக்கு புது வாழ்க்கையை வேறு வடிவத்தில் கொடுக்கின்றார். மகேஷின் உணர்வுகள் எதிரொலிக்கும் வகையில், இலங்கையில் மறுசுழற்சி செய்வதை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் அனைவருக்கும் பங்கு உண்டு. இலங்கையில் முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகள், சமூக மையங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நாடு முழுவதும் 300 இற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டிகள் உள்ளன. உங்கள் கழிவுகளை பிரித்து, பொறுப்புடன் அப்புறப்படுத்துங்கள். நாம் இந்த அழகிய உலகினை பேணிடுவோம்.

Related Articles

Latest Articles