கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவி

கொலைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசியல் நியமனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, துமிந்த சில்வாவிற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.

இந்தத் தகவலை ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் ஊடங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Related Articles

Latest Articles