கொழும்பு, கொள்ளுபிட்டி – லிபட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இபோச பஸ்மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் எழுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து தெனியாய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீதே இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
மரம் முறிந்துவிழுந்ததால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.










