பிரதான அரசியல் கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே மே தின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவுள்ளன. இதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் செயற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் தயாராகிவருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மருதானையிலும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கெம்பல் பார்க் மைதானத்திலும் மே தின கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பிலேயே மே தின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவுள்ளன. இதர சிறு கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளையே தேர்வு செய்துள்ளன.
அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மே தின கூட்டம் நடத்தப்படும் இடத்தை இன்னும் வெளியிடவில்லை.