நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொஸ்வத்தை மகாநாம தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானால் தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மகாநாம தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, இன்று வரை தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.