‘கோட்டா வீட்டுக்கு போ’ – பொகவந்தலாவையிலும் வெடித்தது போராட்டம்

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று (4) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் டின்சின் மற்றும் அப்பகுதியில் உள்ள சில தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles