கோதுமை மா விலை உயர்வால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு (படங்கள்)

கோதுமை மாவின் விலை திடீரென மீண்டும் அதிகரித்துள்ளதால் பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவால் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை கோதுமை மாவின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர்.
காலை வேலையிலும், இரவு வேளையிலும் அவர்களுக்குரிய நேரத்திற்கு ஏற்ப கோதுமை மாவினை பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த சம்பளம் பெரும் இவர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன்காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை நலன் கருதி கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும், பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிஷாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles