கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம், முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜீப்பில் பயணித்த இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இராஜாங்க அமைச்சரும், பொலிஸ் கான்ஸ்டபிலும் உயிரிழந்துள்ளனர். சாரதி சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
