கோல்பேஸ் தாக்குதல் – குவியும் கண்டனங்கள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

மனித உரிமைகள் ஆணைக்குழு

காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது . இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் மாறும் வலியுறுத்தியுள்ளது

ஹனா சிங்கர் ஹம்டி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என்று ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்தது. அதனை விடுத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில், அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கம்

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles