சஜித்துக்காக மேடையேறமாட்டேன்! தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வவுனியாவில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர். தலைவர் மாவை சேனாதிராஜா தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார். வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை.

இதேநேரம் சி.சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார். யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையிலேயே மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட 6 பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்தனர்.

இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை, எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய 3 தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன். இதேநேரம் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles