சஜித் தலைமையில் அவசரமாக கூடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக நாடாளுமன்றம் அவசரமாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு கூடவுள்ளது.

Related Articles

Latest Articles