” எதிர்க்கட்சிகளின் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் மலரவுள்ளது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” சர்வதேசத்திடம் அரசு, யாசகம் பெற்றுவருகின்றது. ஆனால் நாட்டை மீட்ககூடிய வகையிலான உதவி இன்னும் கிடைக்கவில்லை. இந்த அரசால் நாட்டை மீட்க முடியாது. எனவே, தேர்தலுக்கு செல்லுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நாட்டை மீட்பதற்கான பொது வேலைத்திட்டம் தொடர்பில் கட்சிகள் பேச்சு நடத்திவருகின்றனர். அந்தவகையில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி அமையும். அடுத்து நடைபெறும் தேர்தல்களின் அந்த கூட்டணியின்கீழ்தான் எதிரணிகள் போட்டியிடும்.” – எனவும் கிரியல்ல குறிப்பிட்டார்.
